லைகா நிறுவனத்தில் 120 கோடி ருபாய் ஊழலா?! இந்தியன் 2 இதனால் தான் தாமதம் ஆனதா?!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுபாஷ்கரன் வைத்திருக்கும் பட நிறுவனம் தான் லைகா. இந்நிறுவனம் விஜய் நடிப்பில் 2013இல் வெளியான கத்தி திரைப்படம் மூலம் தமிழில் தடம் பதித்து ஆரம்பமானது. இந்நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்ற காரணமாயிருந்தவர் தமிழ் திரைபட தயாரிப்பளார் விநியோகிஸ்தர் கருணாகரன். இவர் தான் லைகா நிறுவதிற்க்காக கதை கேட்பது, தயாரிப்பு நிர்வாக செலவுகளை கவனிப்பது. நடிகர்களின் கால்ஷீட் முதற்கொண்டு கவனித்து வந்துள்ளாராம்.
இவர் முதலில் கதை கேட்டு ஓகே செய்துவிட்டு தான், தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் கூறுவாராம். தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு தெரியாமல் தான் வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும், இந்தியன் 2 திரைப்படம் ஓகே ஆனதாம். பின்னர் அறிவிப்பிற்கு சில நாட்கள் முன்னர் தான் சுபாஷ்கரனிடம் கூறப்பட்டதாம். மேலும், கருணாகரன் லைகா நிறுவனத்தின் படங்களை வெளிநாட்டிற்கு விற்கையில் அதிக கோடிகள் ஊழல் செய்துவிட்டாராம்.
இதனை தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குவழக்குகளை பார்த்த சுபாஷ்கரனுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. சுமார் 120 கோடி ரூபாய் வரை கணக்கில் வராமல் இருந்துள்ளது. உடனே கருணாகரனை வேலையை விட்டு தூக்கி, அவர் மீது நீதிமன்றத்தில் புகாரும் கொடுத்துள்ளார். இதனால் தான் இந்தியன் 2 தயாராக காலதாமதமாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.