மீண்டும் தொற்றிக் கொண்ட ஏலியன்கள் குறித்த குழப்பம்?அபூர்வ சந்திர கிரகணம் அன்று நிகழ்ந்த சம்பவம் ….
பறக்கும் தட்டுகள் கடப்பது போன்ற காட்சிகள் அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்ந்த நாளில், பதிவாகி இருப்பதால், ஏலியன்கள் குறித்த குழப்பம் மீண்டும் தொற்றிக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஃக்ரிஃபித் ((griffith)) வான் ஆய்வு மையத்தில், அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்ந்த போது வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ பதிவில் நிலவுக்கு அருகே பிரகாசமான ஒரு பொருள் அதிவேகமாக கடந்து செல்வதைப் போன்ற காட்சிகள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்களும், நிபுணர்களும் கருதுகின்றனர். எனவே ஏலியன்களின் பறக்கும் தட்டுகள் தானா என்று மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.