கொரோனா தொற்றை விரைவில் கண்டறியும் குறைந்த விலை சென்சார் -அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்
கொரோனா அறிகுறியற்ற நபர்களை அடையாளம் காணும் வகையில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த விலையில் சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஒரு குழு இந்த சென்சாரை உருவாக்கியுள்ளது. இந்த சென்சார் ஆண்ட்ரூ மற்றும் பெக்கி செர்ங் மருத்துவ பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் வீ.காவோவின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.
இது ஒரு சிறிய அளவிலான உமிழ்நீர் அல்லது இரத்தத்தை ஆய்வு செய்வதன் மூலம் கொரோனா தொற்று நோயை வீட்டிலிருந்து கண்டறிய உதவுகிறது. துணை மின்னணுவியலுடன்(electronics ) இணைக்கப்படும்போது, புளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் சென்சார் வயர்லெஸ் முறையில் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு முடிவை அனுப்ப முடியும்.
தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு முக்கிய அங்கம், இந்த முறையால் அறிகுறி இல்லாத நபர்களில் தொற்றுநோய்களை விரைவாக அடையாளம் காணக்கூடும்.