வீட்டை விட்டு ஓடிய காதலர்களை சேர்த்து வைப்பதாக கூறி அழைத்து பிரித்து வைத்ததால் அந்த பெண் தற்கொலை செய்துள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி எனும் பகுதியில் உள்ள கக்கன்ஜி நகரில் வசித்து வரக்கூடிய முத்து -பழனிஅம்மாள் ஆகியோரின் 20 வயது மகள் தான் முத்து பாண்டியம்மாள். முத்துபாண்டியம்மாள் படிக்கும் கல்லூரியில் ஒன்றாக பயின்று வந்த கிருஷ்ணன் என்பவரது மகன் முத்துகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த பெண் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் முத்துகிருஷ்ணன் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்று திருமணம் செய்து மூன்று நாட்கள் ஒன்றாக இருந்துள்ளனர்.
இதனை அடுத்து முத்துகிருஷ்ணன் தந்தை இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி சமாதானம் செய்து சென்னையிலிருந்து இருவரையும் ஊருக்கு வரவழைத்துள்ளார். அதன்பின் தேவதானம்பட்டி ஊர் பஞ்சாயத்தில் வைத்து அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி தனது மகனுக்கு 20வயது தான் ஆகிறது என வயதை காரணம் காட்டி இருவரையும் பிரித்து வைத்துள்ளார முத்து கிருஷ்ணனின் தந்தை. இதனால் மனமுடைந்த அந்த பெண் இனி தனக்கு அவமானமாக இருக்கும் என்பதால் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். எனவே முத்துப்பாண்டி அம்மாள் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இருவரையும் பிரித்து வைத்ததாகவும், அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த அப்பெண்ணின் காதலன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…