உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த சிறப்பு தான் காதலர் தினம்.உலகத்தில் உள்ள அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய கொண்டாட்டம் காதலர் தினம். இந்த நாளை ஜாதி,மதம் ,இனம் பாராட்டாமல் உலகில் உள்ள அனைவராலும் கொண்டாடப்படும் மிக முக்கிய கொண்டாட்டம்.
பொங்கல் ,கிறிஸ்துமஸ்,மற்றும் தீபாவளி போன்ற கொண்டாட்டங்களை ஒரு சிலர் மட்டுமே கொண்டாடும் விழாவாக இருக்கிறது. ஆனால் காதலர் தினம் உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் ஒரு மிக முக்கிய விழாவாகும்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு அதிக அளவில் வாழ்த்து அட்டைகளை பரிமாறி கொண்டாடும் தினமாக இருக்கும் திருநாள் காதலர் தினம்.
இந்த நாளில் காதலர்கள் தங்களின் மனதிற்கு விருப்பமானவர்களிடம் தங்களுடைய காதலை அழகாக வெளிப்படுத்துவார்கள். கல்யாணம் முடித்தவர்களும் இந்த விழாவை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். அதாவது திருமண முடித்தவர்கள் கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவரும் மாறி மாறி அன்பை வெளிபடுத்தி பரிசுகளை கொடுத்து மகிழ்வார்கள்.காதலர்களின் சின்னமாக விளங்குவது அழகிய ரோஜா மலர். காதலர் தினத்தன்று காதலர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு அழகிய ரோஜா மலரையும் மற்றும் விதமான பரிசு பொருட்களையும் வழங்குவார்கள்.காதலர் தினத்தன்று சுற்றுலா தலங்கள் , கடற்கரை ‘ரோஜா தோட்டம்’ போல காதலர்கள் வெள்ளத்தில் பூத்து குலுங்கும். உலகத்தில் உள்ள அனைவருக்கும் காதல் வருவது மிக இயற்கையான ஒன்று. எனவே காதலை போற்றுவோம் !!மதிப்போம்!!!வாழ்த்துவோம் !!நேசிப்போம்!!!!
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…