ஜாதி,மதம் ,இனம் ஆகியவற்றை தாண்டி வரும் காதல் !

Default Image

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த சிறப்பு தான் காதலர் தினம்.உலகத்தில் உள்ள அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய கொண்டாட்டம் காதலர் தினம். இந்த நாளை ஜாதி,மதம் ,இனம் பாராட்டாமல் உலகில் உள்ள அனைவராலும் கொண்டாடப்படும் மிக முக்கிய கொண்டாட்டம்.

பொங்கல் ,கிறிஸ்துமஸ்,மற்றும் தீபாவளி போன்ற கொண்டாட்டங்களை ஒரு சிலர் மட்டுமே கொண்டாடும் விழாவாக இருக்கிறது. ஆனால் காதலர் தினம்  உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் ஒரு மிக முக்கிய விழாவாகும்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு அதிக அளவில் வாழ்த்து அட்டைகளை பரிமாறி கொண்டாடும் தினமாக இருக்கும் திருநாள் காதலர் தினம்.

இந்த நாளில் காதலர்கள் தங்களின் மனதிற்கு விருப்பமானவர்களிடம் தங்களுடைய காதலை அழகாக  வெளிப்படுத்துவார்கள். கல்யாணம் முடித்தவர்களும் இந்த விழாவை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். அதாவது திருமண முடித்தவர்கள் கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவரும் மாறி மாறி அன்பை வெளிபடுத்தி பரிசுகளை கொடுத்து மகிழ்வார்கள்.காதலர்களின் சின்னமாக விளங்குவது அழகிய ரோஜா மலர். காதலர் தினத்தன்று காதலர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு அழகிய ரோஜா மலரையும் மற்றும்  விதமான பரிசு பொருட்களையும்  வழங்குவார்கள்.காதலர் தினத்தன்று சுற்றுலா  தலங்கள் , கடற்கரை ‘ரோஜா  தோட்டம்’ போல காதலர்கள் வெள்ளத்தில் பூத்து குலுங்கும். உலகத்தில் உள்ள அனைவருக்கும் காதல் வருவது மிக இயற்கையான ஒன்று. எனவே காதலை போற்றுவோம்  !!மதிப்போம்!!!வாழ்த்துவோம் !!நேசிப்போம்!!!!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்