இந்த காதல் இவரையும் விட்டு வைக்கலயா ? ஆபிரகாம் லிங்கனின் அழகான காதல் கதை
- ஆபிரகாம் லிங்கனின் காதல் கதை.
- வாழ்க்கையையே திருப்பி போட்ட காதல்வலிகள்.
நமது நாட்டின் தலை சிறந்த மனிதர்கள் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் மக்களின் அடிமை தனத்தை போக்க பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர்.
கறுப்பின மக்களின் விடிவெள்ளி
பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம் என்று அறைகூவல் விடுத்தனர். அடிமை முறையால் சிதைக்கப்பட்டு, முகவரி இழந்த கறுப்பின மக்களின் வாழ்க்கையில் விடியல் பிறக்க விடிவெள்ளியாக பிறந்த அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன்.
அபிராகாம் லிங்கனின் வாழ்வில் மலர்ந்த அழகிய காதல்
செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்த இவர், பின்னாளில் அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி என்ற உயர்ந்த நிலைய அடைந்தார். இவரது வாழ்க்கையிலும் ஒரு அழகிய காதல் பிறந்துள்ளது.
அடிமைத்தன அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர பாடுபட்ட, சாதித்து காட்ட வேண்டும் என்ற ஒருமுகப்பட்ட உணர்வுடன் உழைத்து கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையில் அழகிய பெண் ஒருத்தி காதல் சலனத்தை ஏற்படுத்தினாள்.
லிங்கனின் காதல் கதையின் கதாநாயகி
ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையில் காதல் கதையின்,கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஆன் மேய்ஸ் ரட்லெட்ஜ். இவரது காலத்தில் அவர் வசித்த பகுதியில் பெண்கள் பள்ளிக்கு செல்வதில்லை. அந்த நிலையை மாற்றி, பள்ளிக்கு சென்று வந்த அவர், பின் அவரது தந்தை நடத்தி வந்த பயணியர் விடுதியை நிர்வகிப்பதில் உதவி செய்து வந்தாள்.
அப்போது, அப்பகுதிக்கு, ஆபிரஹாம் லிங்கன் நகருக்கு புதிதாக வந்து சேர்ந்தார். இவர் சில காலம் ஆனின் தந்தை நடத்திய விடுதியில், உணவருந்தி வந்தார். இதன்மூலம், ஆபிரஹாம் லிங்கனுக்கு, ஆனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
ஆபிரகாம் லிங்கனின் குணாதிசயங்கள், ஆனை கவர்ந்தது. இதனையடுத்து இவர் பாடங்களில் சந்தேகம் கேட்பது போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அவரை சந்திக்கும் வாய்ப்புகளை அதிகமாக ஏற்படுத்திக் கொண்டார்.
ஆனின் காதில் காதலை உரைத்த லிங்கன்
ஆனின் உள்ளத்தில் ஆபிரகாம் லிங்கன் மீதான காதல் எனும் மலர் மலர்வதற்கு முன்பதாகவே, ஆபிரகாம் லிங்கனின் காதல் என்னும் மலர் முழுமையாக மலர்ந்து விட்டது. இந்நிலையில்,இந்த காதலை அந்த அழகிய தேவதையிடம், ஆண் என்ற கம்பீரத்தோடு ஒரு கூறியுள்ளார்.
லிங்கனின் உண்மையான பாசத்தை, புரிந்துகொண்ட ஆன், அவரது பாசத்தில் மெழுகு போல உருகிவிட்டாள். இந்த உண்மணியான காதலை ஆன் ஏற்றுக்கொண்டாள். இவர்கள் இருவரும் காதல் என்னும் வானில் சிறகடித்து பறக்கும் அழகிய பறவைகளாக பறந்து கொண்டிருந்த நிலையில், அவர் தனது சட்ட கல்வியில் பட்டம் பெற்றபின், இரு மனங்கள் இணையும் திருமண விழாவை ஊர் உலகை சாட்சியாக வைத்து நடத்தலாம் என முடிவு செய்தனர்.
காதல் வாழ்க்கையில் வீசிய புயல்
வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக புயல் ஒன்று வீச தொடங்கியுள்ளது. இதனையடுத்து, திடீரென ஆனுக்கு டைபாயிடு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த காய்ச்சலால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டாள்.
இந்நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆன் கட்டிலில் படுத்த படுக்கையானாள். பின் ஆபிரஹாம் லிங்கனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள், ஆபிரஹாம் லிங்கன் ஆனை சென்று பார்த்தார்.
அன்பே ஒரு வார்த்தை சொல்
உயிர்க்கு போரடிக்க கொண்டிருந்த அந்த சமயத்தில், ஆபிரகாம் லிங்கனிடம் அன்பே… என்னை ஒரு முறை நீலா கண்ணழகி என்று அழைப்பீர்களா? என்று கூறியுள்ளார். ஆனின் அன்பான கட்டளையை ஏற்றுக்கொண்டு , தனது இதயத்தில் பொங்கிய காதலை ஒன்று திரட்டி, உருக வைக்கும் குரலில் ” என் அன்பே.. நீலக் கண்ணழகி” என அழைத்தார்.
ஆனின் அன்பான வேண்டுகோள்
லிங்கனின் அன்பான அழைப்பில், ஆன் திருப்தியான புன்னகை செய்தாள். ” அன்பே… இன்னுமொரு வேண்டுகோள் நிறைவேற்றுவீர்களா?” என்று கேட்டாள். “சொல்…. அன்பே !” என்றுமெதுவாக சொன்னார். “என் காதல் ஆபிரகாம் லிங்கனுடன் இணைந்த துணைவியான நான் – ஆன் ரட்லெட்ஜ், மரணம் தந்த பிரிவால் இந்த கல்லறையில் உறங்குகிறேன்” என்று எனது கல்லறையில் பொறித்து வைப்பீர்களா? இன்றி ஆன் ஏக்கத்துடன் கேட்டாள்.
காதலுக்கு பிரியாவிடை அளித்த ஆன்
ஆபிரகாம் லிங்கனின் இதயத்தை காதல் என்னும் வேதனையின் அன்பு கிழித்து கொண்டு சென்றது. வேதனை தாங்காமல் அழுதுகொண்டிருந்த லிங்கனுக்கு ஆன் ஆறுதல் கூறினார். பின் இவரால் இருவரின் காதலுக்கு பிரியாவிடை அளித்து, புன்னகை மாறா முகத்துடன் ஆன் விடை பெற்றாள்.
காதலை கல்லறையில் பதித்த லிங்கன்
ஆனுடனான, ஆபிரகாம் லிங்கனின் இறுதி சந்திப்பு இது தான். ஆனின் மறைவால் துடிதுடித்து போன லிங்கன், அவள்,கலறையிலேயே இருந்தார். காதலி விரும்பியபடி கல்லறையில் அவள் சொன்ன அன்புருவான வார்த்தைகளை பொறித்தார்.
பல கடுமையான இன்னல்களை தாங்கி, சவால்களை சந்தித்து, பல தோல்விகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த இவரது வாழ்க்கையில், நீங்கா துயராக ஆணின் மறைவு அவரது இதயத்தில் பதிந்தது.
மழையில் நனைந்த காதல் நினைவுகள்
ஒரு நாள் மழை பெய்தது. அப்போது ஆபிரகாம் லிங்கன் ” ஐயோ, கல்லறையிலுள்ள என் ஆன், இந்த மலையில் நனைகிறாளே…” என்று தன நண்பர்களிடம் சொல்லி கதறினாள். இவரது மறைவுக்கு பின் தற்கொலைக்கு கூட துணிந்து விட்டுட்டார். தனது சிறுவயதில் தாயை இழந்து, அதனால் தன்னலமற்ற அன்பிலிருந்து வஞ்சிக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன், அதை மீண்டும் பெற்றது தனது அன்பு காதலியான ஆணிடமிருந்து தான்.
கடைசியில், லிங்கனுக்கு ஆறுதலாக ஆணின் நினைவுகள் மட்டுமே இருந்தது. காலம் தனது வேலையை கட்சிதமாக முடிக்கும். இந்நிலையில், அதன்பின் அரசியலில் ஈடுபாடுள்ளவராக மாறினார் ஆபிரகாம் லிங்கன்.
மீண்டும் லிங்கனின் இதய கதவை தட்டிய காதல்
இந்நிலையில், செல்வாக்குள்ள அரசியல் குடும்பத்தை சேர்ந்த சேர்ந்த மேரி டோட் என்கிற பெண்மணி ஆபிரகாம் லிங்கனை தீர்மானம் செய்ய விரும்பி அவரிடம் சம்மதம் கேட்டார். ஆனால் ஆனின் காதல் வலையில் சிக்கிய லிங்கன், மேரியின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனின் அன்பால் திறக்கப்பட்ட லிங்கனின் இதயம்
இதனையடுத்து, இதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, ஆன் போலவே தனது நடை, உடை, பாவனைகளை மாறிக்கொண்டு மீண்டும் அவரிடம் சம்மதம் கேட்டுள்ளார். இதையடுத்து, ஆனை போலவே மேரி இருந்ததால், அவரை ஏறிக்கொண்டு திருமணம் செய்து கொண்டார்.
சிலகாலங்கள் கடந்த பின்பு மேரியின் குணநலன்களில் மாற்றம் ஏற்பட்டது. லிங்கனின் திருமண வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பு பெரிய ஏமாற்றத்தைஏ அளித்தது. ஆனாலும், என்னராவது ஒரு மேரி, ஆனை போல மாறுவாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
எதிர்பார்ப்பிற்கு விடை கொடுத்த ஏமாற்றம்
ஆனால், 1865ஆம் ஆண்டு அவர் சுட்டு கொள்ளப்படும் வரையில், அவர் எதிர்பார்த்த அந்த அன்பு மேரியிடம் இருந்து கிடைக்கவில்லை. காதல் என்னும் வலையில் சிக்கிய ஆபிரகாம் லிங்கன் அதிலிருந்து தப்பிக்க முடியாமல், அதினாலே வஞ்சிக்கப்பட்டார்.