இங்க காதல் எல்லாம் எவனும் பண்ணலை – எனக்கு காதல் வராது, வந்தா சொல்றன்!
இங்க காதல் எல்லாம் எவனும் பண்ணலை, எனக்கு காதல் வராது, வந்தா சொல்றன் என பாலாஜி கூறியுள்ளார்.
கடந்த 42 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சண்டை, கோபம், பிரச்சனைகள், காதல், அன்பு என பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது. பாலாவும் ஷிவானியும் காதலிப்பதாக ரசிகர்கள் நினைப்பதுடன், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களும் அதைதான் நம்புகின்றனர். இந்நிலையில் இன்று இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசஸ் நடந்தது. அதில் காரணத்துடன் இருவரை நாமினேட் செய்ய சொல்லி பிக்பாஸ் கூறும்பொழுது இங்கு காதல் பாலாவுக்கு கண்ணை மறைக்கின்றது என்று கூறி ஆரி பாலாவை நாமினேட் செய்தார்.
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில் காதல் கண்ணை மறைக்கிறது எனும் வார்த்தையை கூறி நாமினேட் செய்தார்கள் என்று பிக் பாஸ் அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டார். இதனால் பாலாஜி, இங்க காதல் எல்லாம் எவனும் பண்ணவில்லை கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி சென்று, அதன் பின் ஷிவானியிடம், எனக்கு காதல் வராது வந்தால் கூறுகிறேன் என கூறிவிட்டு செல்கிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,
View this post on Instagram