கார்த்திகை மாதம் துவங்கிய முதலே ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலை செல்வதற்காக கடுமையான விரதம் இருந்து வருகின்றனர். 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலை பயணத்தை தொடங்குகின்றனர். அப்படி தொடங்கி சபரிமலை கோவிலுக்கு சென்றவுடன் 18 படிகளை கடந்து ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர்.
அப்படி ஐயப்ப பக்தர்கள் கடக்கும் அந்த 18 படிகளின் மகத்துவம் பலவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது அந்த பதினெட்டு படிகளானது சுவாமி ஐயப்பன் தனது போர் காலங்களில் பயன்படுத்திய ஆயுதங்களை குறிக்கின்றன என கூறப்படுகிறது. அதாவது ஐயப்பன் பயன்படுத்திய வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுதிவை, பாசம், சக்கரம், ஹலம், மழு, மூலஸம் ஆகிய 18 போர் கருவிகள் கொண்டு இந்தப் படிக்கட்டுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல 18 படிகளில் கடவுள் வாசம் செய்கிறார் எனவும் கூறப்படுகிறது. அதில் ஒற்றைப்படை படிகளில் நவக்கிரகங்களும், இரட்டைப்படை வரிசைகளில் தெய்வங்களும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
ஒன்றாம் திருப்படி சூரியபகவான், இரண்டாம் திருப்படி சிவன், மூன்றாம் திருப்படி சந்திரபகவான், மூன்றாம் திருப்படி சந்திரன் , நான்காம் திருப்படி பராசக்தி, ஐந்தாம் திருப்படி அங்கார பகவான், ஆறாம் திருப்படி முருகன், ஏழாம் திருப்படி புதபகவான், எட்டாம் திருப்படி விஷ்ணு, ஒன்பதாம் திருப்படி குரு பகவான், பத்தாம் திருப்படி பிரம்மன், பதினொன்றாம் திருப்படி சுக்கிரன், பன்னிரெண்டாம் திருப்படி லட்சுமி, பதின்மூன்றாம் திருப்படி சனி பகவான், பதினான்காம் திருப்படி எமதர்மன், பதினைந்தாம் திருப்படி ராகு, பதினாறாம் திருப்படி சரஸ்வதி, பதினேழாம் திருப்படி கேது பகவான் , பதினெட்டாம் திருப்படி விநாயகர் என குறிப்பிடப்படுகிறது.
இதுபோக பதினெட்டு படிகளும் ஐயப்பன் நாமமாக குறிப்பிடப்படுகிறது அதாவது குளத்துப்புழை பாலகனே, ஆரியங்காவு ஐயன், எருமேலி சாஸ்தா, அச்சங்கோவில் அரசன், புவனேஸ்வரன், வீரமணிகண்டன், பொன்னம்பல வாசன், மோகினி பாலன், பந்தளத்து ராஜகுமாரன், வன்புலி வாகனன், ஹரிஹரசுதன், சற்குருநாதன், பிரம்மாண்ட நாயகன், சாந்த ஸ்வரூபன் என பலவாறு இந்த 18 படிகளும் வகைப்படுத்தப்படுகின்றன.
இன்னும் 18 படிகள் சபரிமலை சுற்றியுள்ள 18 மலைகளை குறிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த 18 பற்றி மகத்துவமானது என சொல்லிக்கொண்டே போகலாம். அவை எண்ணிலடங்காது. அந்த 18 படிகளை கடந்து நாம் முழுமனதோடு ஐயப்பனை தரிசித்தால் நமக்கு அத்துணை நல்ல காரியங்களும் நடைபெறும். நாமும் புனித படுவோம்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…