ரஷ்யாவை சேர்ந்த எலிசவேடா (22) இவரது சகோதரி ஸ்டெனிபானியா (17) சிறு வயதிலிருந்தே அவர்கள் அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்து உள்ளனர். வளர்ந்த பின்னர் இருவருமே மாடலிங் துறையில் நுழைந்தனர்.
ஸ்டெனிபானியா மிகவும் அழகான இருந்ததால் எலிசவேடாவிற்கு பொறாமை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஸ்டெனிபானியா உடலில் 189 முறை கத்தியால் குத்தி நிர்வாணமாக்கி கண்களை வெளியில் எடுத்து , வலது காதை அறுத்து கொலை செய்தார்.
இதனால் சம்பவ இடத்திலேயே ஸ்டெனிபானியா இறந்தார். அந்த நேரத்தில் ஸ்டெனிபானியாவின் காதலன் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீட்டில் ஸ்டெனிபானியா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
(வட்டமிடப்பட்டவர் தான் கொலை செய்த எலிசவேடா )
உடனே எலிசவேடாவை கட்டிப் போட்டுவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எலிசவேடாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி எலிசவேடா மனநல சிகிசைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் எலிசவேடாவின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…