இந்த மிகச்சிறந்த படத்தை பார்க்க காத்திருக்கிறேன் – பிரேமம் இயக்குனர்.!

வாடிவாசல் படத்தை பார்க்க காத்திருக்கிறேன் என்று இயக்குனர் அல்போன்ஸ் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு இந்த வருட இறுதியில், தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகக்கியது. இந்த நிலையில் டைட்டில் லுக் போஸ்ட்டரை பிரேமம் பட பிரபலம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு ” ரத்தினக்கல் போன்ற இந்த மிகச்சிறந்த படத்தையும் பார்க்க காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025