தேடி வரும் தெலுங்கு பட வாய்ப்புகள்.! பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்.?

பிரியா பவானி சங்கர் அடுத்ததாக நாக சைதன்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, பொம்மை, கசடதபற, களத்தில் சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் பெள்ளுச்சூப்ளு ரீமேக் மற்றும் விஷாலின் ஒரு படம், 5மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகமாகி உள்ளார் .
இந்த நிலையில் மேலும் இவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கவிருக்கும் தேங்கியூ என்னும் படத்தில் பிரியா பவானி சங்கரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025