உலகம் முழுவதும் கொரோனா பாதித்து மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நீண்ட நாள் வரை நுரையீரல் பாதிப்பு இருப்பதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக இங்கிலாந்து நாட்டு ஷெப்பீல்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் ஆராய்ச்சி ஒன்று மேற்கொண்டு அதில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர்.
அதில் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பி 3 மாதங்கள், நீண்ட காலம் ஆனவர்களுக்கு கூட இந்த நுரையீரல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பாதிப்பு வழக்கமாக எடுக்கப்படும் சி.டி ஸ்கேன்களில் தெரிவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதைப்பற்றி ரேடியாலஜி பத்திரிக்கையில் வந்த தகவல்கள் பின்வருமாறு:
கொரோனா தொற்று பாதிக்காமல் வழக்கமாக அதிக மூச்சு திணறல் பாதிப்புகளை சந்தித்தவர்களுக்கும் இது போன்று நுரையீரல் பாதிப்பு இருக்கும் என்றும், இது குறித்து நீண்ட ஆய்வு தேவை என்று கூறியுள்ளது.
கொரோனா பாதித்து குணமடைந்து 3 மாதங்கள், 9 மாதங்களுக்கு பிறகும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்களில் இவர்களது நுரையீரல் பாதித்த வண்ணம் இருப்பதை காணமுடிகிறது. மேலும், மற்ற மருத்துவ அளவீடுகள் சரியாக இருக்கிறது.
கொரோனாவிலிருந்து சரியான பிறகும் கூட பலர் மூச்சுத்திணறல் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இந்த பாதிப்பு சாதாரண சி.டி ஸ்கேன்களில் தெரிவதில்லை என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பெர்கஸ் க்ளீசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…