Long March-8: புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா.!
சீன விண்வெளி ஆய்வு மையம் ‘லாங்க் மார்ச் 8’ என்ற புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீனா, லாங்க் மார்ச் 8 என்ற ஒரு புதிய ராக்கெட்டை உருவாகியுள்ளது. இந்த புதிய ராக்கெட் 4.5 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்று ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய ‘லாங்க் மார்ச் 8’ ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது.
இந்த புதிய ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு சோதித்த நிலையில், 5 செயற்கைகோள்களுடன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் 50.3 மீட்டர் (165 அடி) நீளம் கொண்டது, 3.35 மீட்டர் விட்டம் கொண்ட மைய நிலை மற்றும் 2.25 மீட்டர் விட்டம் கொண்ட இரண்டு பக்க பூஸ்டர்களைக் கொண்டுள்ளது. இந்த ராக்கெட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எதுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சீனாவின் ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான சீனா அகாடமி ஆஃப் லாஞ்ச் வாகன தொழில்நுட்பம் தான் லாங்க் மார்ச் தொடரின் ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த லாங் மார்ச் தொடரிலிருந்து சீனா 350 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இதுவரை ஏவியுள்ளது. புதிய லாங் மார்ச் -8 மாடல் “ஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9 இன் சீன பதிப்பு” என்று அழைக்கப்படுகிறது.