ஏன் இது தொடர்ந்து நடைபெறுகிறது.? – கறுப்பின ஆதரவாளரின் கேள்வி.!

ராப் பாடகரும், கருப்பின மக்களின் ஆதரவாளருமான ரியான் கோலாகோ, தனது காரில் போதை பொருள் கடத்தியதாக காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அந்த கார் கண்ணாடி போலிசாரால் உடைக்கப்பட்டதாம்.
லண்டனில் வசிக்கும் ராப் பாடகரும், கருப்பின மக்களின் ஆதரவாளருமான ரியான் கோலாகோ அண்மையில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளிக்கையில், அவருக்கு அண்மையில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட வாகன பரிசோதனை பற்றி விவரித்தார்.
அதில், ‘ தனது காரில் தன் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம், அடிக்கடி காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் அதற்கான வீடியோவையும் பதிவிட்டு, ‘ஏன் இது என் மீது தொடர்ந்து நடைபெறுகிறது?’ என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், காரி பரிசோதனையின் போது, காரை வழிமறித்த காவல்துறையினர் கார் கண்ணாடியை உடைத்து உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து லண்டன் போலீசார் கூறுகையில், ரியான் கோலாகோ, தனது காரை சாலையில் நிறுத்தியிருந்தார் எனவும், அவரது காரில் போதை பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்டது அதன் காரணமாகவே காவல்துறையினர் அவரது காரை சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.
மேலும், காவல்துறையினர் ரியான் கோலாகோவை காரை விட்டு வெளியே இறங்குமாறு கூறி உள்ளனர் எனவும், ஆனால் அவர் இறங்க மறுத்ததின் காரணமாகவே அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு சோதனை நடத்தியதாகவும், மேலும், சோதனைக்கு பிறகு அவரது காரில் எந்த வித போதை பொருளும் கடத்தப்படவில்லை எனவும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து போலீசாரிடம் ரியான் கோலாகோ புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும் அவரது காரை திருப்பி அனுப்பி உள்ளோம். மேலும் அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025