லண்டன் கால்பந்து : லா லிகா, இபிஎல் தொடர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை என்பதால் ரசிகர்கள் வருத்தம்…!!
ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்காக, ஆண்டு தோறும் கால்பந்து லீக் தொடர்கள் நடத்தப்படுவது வழக்கம்.இந்த கால்பந்து கிளப் போட்டிகளால் வருடத்தின் 365 நாட்களும் ஐரோப்பா கண்டமே திருவிழா போன்று காட்சி அளிக்கும்.
இத்தாலி,பிரான்ஸ்,ஜெர்மனி,ஸ்பெயின்,இங்கிலாந்து,போர்ச்சுக்கல்,ஸ்விட்சர்லாந்து என எந்த நாடுகள் கால்பந்து லீக் தொடர்கள் நடத்தினாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஸ்பானிஷ் தொடரான லா லிகா மற்றும் இங்கிலாந்து தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக் என இரு லீக் தொடர்கள் மட்டுமே.இந்த இரு பிரீமியர் லீக் தொடர்களில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் இருப்பதால் சாதாரண லீக் போட்டிகளுக்கு கூட ரசிகர்கள் கூட்டத்தால் மைதானமே நிரம்பி வழியும். (ஸ்பானிஷ் தொடரான லா லிகா தொடரில் தற்போது 29-வது லீக் சுற்று முடிவடைந்து ள்ள நிலையில் 30-வது சுற்று இந்த மாத இறுதியில்(மார்ச் 31-ஆம் தேதி) தொடங்கு கிறது)இங்கிலாந்து நாட்டுத் தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக் 31-வது லீக் சுற்று முடிவடைந்துள்ள நிலையில் 32–வது சுற்று மார்ச் 31-ஆம் தேதி முதல் நடைபெறு கிறது. இந்த இரு தொடர்களுக்கும் ஏறக்குறைய பத்து தினங்கள் விடுமுறை இருப்பதால், கால்பந்து போட்டிகள் இல்லாமல் ரசிகர்கள் சோகத்துடன் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.