லண்டனில் அடுக்குமாடிக்குடியிருப்பில் பயங்கர தீவிபத்து!
நேற்றிரவு லண்டனில் அடுக்குமாடிக்குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கென்சிங்டன் அருகே குடியிருப்பின் முதல் தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களிலும் பரவியது.
தகவல் அறிந்ததும் 12 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த 80 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர். இருப்பினும் இந்த தீவிபத்தில் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து லண்டன் போலீசார் விசாரணை நடத்தினர். தீ விபத்தால் அருகில் உள்ள கட்டிடங்களில் வசித்தோரும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.