சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க உள்ளாரா லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பேசப்பட்டு வரும் இயக்குனரென்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். இவர் இயக்கத்தில் முதலில் வெளியான மாநகரம் திரைப்படம் பலரது பாராட்டுகளை பெற்றது. அந்த படம் முடிவடைந்து அடுத்தாக கைதி படம் ரிலீசாகி பெரிய வெற்றிபெற்றது.
அந்த கைதி பட ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, தளபதி விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது கோலிவுட்டில் பலரை ஆச்சரியப்படுத்தியது. இவர் இயக்கத்தில் தற்போது தளபதி 64 வேகவேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த பட சூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போது, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேசியுள்ளார். ஆதலால், லோகேஷ் கனகராஜ் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குநரா என கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
ரஜினிகாந்த் தர்பார் படத்தின் ரிலீஸை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025