அனைத்தும் போலி கணக்குகள் – லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
தமிழ் திரையுலகில் மாநகரம் எனும் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற படத்தை இயக்கியதால் பிரபலமாகிய இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவரின் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருப்பதால் ரிலீசுக்கு பின்தங்கி சென்று கொண்டிருக்கிறது.
ஆனால், படம் தயாராக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களில் இருப்பது போன்று சிலர் போலியான கணக்குகளை தொடங்கி உபயோகித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் ட்விட்டர் கணக்கு மட்டுமே வைத்திருக்கிறேன். மற்றது அனைத்தும் போலி கணக்குகள் என்று பதிவு செய்துள்ளார்.