விக்ரம் படத்தின் புதிய அப்டேட்.!? லோகேஷ் கனகராஜ் ட்வீட்.!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதியை வரும் மார்ச் 14 – ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது.
ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேர்ட்ப்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 6 மணிக்கு ட்வீட்டர் ஸ்பேஸில் விக்ரம் படத்தின் அடுத்த அப்டேட் அறிவிக்கப்படவுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
Watch this space at 6pm for the next update on #vikram
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 11, 2022
இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். அனேகமாக விக்ரம் படத்தின் டிரைலர் அல்லது முதல் பாடலாக இருக்கும் அப்டேட் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன அப்டேட் வெளியாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.