இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் ட்ரெய்லர் மட்டும் பாடல்களும் வெளியிடப்படட்டது.
டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே விக்ரம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து வந்ததாக தகவல்கள் பரவி வந்தது. கமலுடன் ஒரு படப்பிடிப்பில் இருக்கும் வீடியோவும் வெளியானது.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய லோகேஷ் சூர்யா நடிப்பதை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய லோகேஷ் ” இந்த விஷயத்தை சஷ்பென்ஷா வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் வெளியே லீக் ஆயிடுச்சு. இப்போ சொல்லிடுறேன், விக்ரம் படத்தில் சூர்யா சார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்களும் படத்திற்காக ஆவலுடன் காத்துள்ளனர்.
அதைபோல் நேற்று வெளியான விக்ரம் படத்தின் ட்ரெய்லரின் ஒரு கட்சியில், முகத்தை மூடி வருபவரும், கையில் இருந்த கத்தியை எரிபவரும் சூர்யா தான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…