லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க போவதாகவும், ‘தலைவர்169’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது லோகேஷ் தெலுங்கின் முன்னணி நடிகர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அதனை மைத்ரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும்,இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் தெலுங்கின் ஆக்ஷன் ஹீரோவான ராம் சரணை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…