இலங்கையையும் குறி வைத்து தாக்கும் வெட்டுக்கிளிகள். வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்.
கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்கிய சூறாவளியால், அங்கு வெட்டுக்கிளிகளின் பெருக்கம் அதிகமானது. ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா ஆகியவை வழியாக இரான், அங்கிருந்து பாகிஸ்தான் வந்து தற்போது இந்தியாவுக்குள் நுழைந்தன.
இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், இந்த வெட்டுக்கிளிகள் ஈரப்பதமான பகுதிகளில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் அனைத்தையும் நாசம் செய்துள்ளது.
இந்தியாவை தொடர்ந்து, தற்போது இந்த வெட்டுக்கிளிகள் இலங்கையையும் குறி வைத்து தாக்க துவங்கியுள்ளது. இலங்கையில் வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல் மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த வெட்டுக்கிளிகள், அங்கு பயிரிடப்பட்டுள்ள சோளம், மா, கொய்யா போன்ற பயிர்களை சேதம் செய்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், வெட்டுக்கிளிகளை பூச்சி மருந்து தெளித்து விரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…