பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி ஆனது இடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜக., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ஆகியோரை அலகாபாத் உயர் நீதிமன்றம், 2001ல் விடுவித்து அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும் இவ்வழக்கை ஆகஸ்ட், 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தியது.இந்நிலையில் வழக்கை சி.பி.ஐ தினசரி விசாரித்து வருகிறது.அதன்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பா.ஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான நிலையில் நீதிபதி எஸ்.கே.யாதவ் முன், அவர் அளித்த வாக்குமூலம் ஆனது பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று (ஜூலை 24) பா.ஜக மூத்த தலைவர் அத்வானி நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது வாக்குமூலம் அளிக்க உள்ளார்.இந்நிலையில் இவ்வழக்கில் இறுதி கட்டத்தை நெருங்கியதை அடுத்து விசாரணை முடிகிறதாகவும், வழக்கு முடியும் தருவாயில் இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்புள்ளதாக மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…