வாழு & வாழவிடு என்றென்றும் அளவுகடந்த அன்புடன் – அஜித்குமார்.!
திரையுலகில் 30- வது ஆண்டு அடி எடுத்து வைக்கும் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் திரைக்கு வந்து 30 வருடங்கள் ஆனதை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில், வலிமை படத்தின் நாங்க வேற மாறி பாடல் வெளியீடபட்டது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது.
திரையுலகில் 30- வது ஆண்டு அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து நடிகர் அஜித்தின் மேனேஜர் மூலமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், “ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், விமர்சகர்களின் விமர்சனங்கள் மற்றும் நடுநிலையாளர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன். வாழு, வாழவிடு. அனைவருக்கும் அளவு கடந்த அன்பை வழங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Mr Ajith Kumar’s message on his 30th year in the film industry
Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals.
Live & Let live!
Unconditional Love Always!!
Ajith Kumar— Suresh Chandra (@SureshChandraa) August 5, 2021