வெஸ்ட் இண்டீஸ் அணியை கதற விட்ட லிட்டன் தாஸ் , ஷகிப் ! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி !
இன்றயை 23-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் பங்களாதேஷ் அணி மோதியது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ஏவின் லெவிஸ் களமிறங்கினர்.இதில் கிறிஸ் கெயில் எந்த ஒரு ரன்களும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஏவின் லெவிஸ் 70 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய ஷை ஹோப் நன்றாக விளையாடி 97 ரன்கள் குவித்தார்.இதனால் அணியின் ஸ்கோரூம் உயர்ந்தது.
இறுதியாக 50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் விளாசியது. 322 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் , சவுமிய சர்க்கார் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இருவருமே அணியின் ரன்களை குவித்தனர்.
இதன் மூலம் சவுமிய சர்க்கார் 2 பவுண்டரி ,2 சிக்ஸர் விளாசி 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிறகு களமிறங்கிய ஷகிப் அல் ஹசன்,தமீம் இக்பால் இருவரும்கூட்டணி இணைய அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.
அணியின் எண்ணிக்கை 121 ஆக இருக்கும் போது தமீம் இக்பால் 6 பவுண்டரி எடுத்து அரைசதம் அடிக்காமல் 48 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் ஒரு ரன்களில் வெளியேற அடுத்ததாக லிட்டன் தாஸ் களமிறங்க ஷகிப் இருவரும் கூட்டணியில் அதிரடி ஆட்டம் ஆடினார்.
இவர்கள் இருவரை கூட்டணியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சாளர்கள் கடைசிவரை திணறினர்.இறுதியாக பங்களாதேஷ் 41.3 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பங்களாதேஷ்அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 94 , ஷகிப் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் ஆண்ட்ரே ரஸ்ஸல் , ஓஷேன் தாமஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.