உலகக்கோப்பையில் இந்திய அணி குறைந்த ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி பட்டியல்!
கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது.
பிறகு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்து.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு இப்போட்டியில் தான் இந்திய அணி குறைந்த ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி இதுவரை 50 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.
இந்திய அணி வெற்றி பெற்ற 50 போட்டிகளில் குறைந்த ரன் வித்தியாசத்தில் 5 முறை வெற்றி பெற்று உள்ளது.அதில் ஆப்கானிஸ்தான் அணி உடன் வெற்றி பெற்ற இப்போட்டியும் ஓன்று.
11 vs ஆப்கானிஸ்தான் சவுத்தாம்ப்டன் 2019 *
16 Vsநியூசிலாந்து பெங்களூரு 1987
29 vs பாகிஸ்தான் மொஹாலி 2011
31 Vs ஜிம்பாப்வே டர்ன்பிரிட்ஜ் வெல்ஸ் 1983
34 vs வெஸ்ட் இண்டீஸ் மான்செஸ்டர் 1983