உதட்டில் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அழியாமல் இருக்க இதை செய்யுங்கள்!

பொதுவாக பெண்கள் தங்கள் உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். ஆனால், விரும்பும் அழகு இயற்கையாக அமைந்து விடுவது அல்ல அல்லவா? எனவே லிப்ஸ்டிக் போட்டு கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடித்த செயல். ஆனால், அந்த உதட்டு சாயம் விரைவில் அழிந்துவிடும் அதை அழியாமல் நாம் எப்படி நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்வது என்பதை பார்ப்போம்.
லிப்ஸ்டிக் போட்ட உடன் இரண்டு உதடுகளுக்கும் இடையில் டிஸ்யூ பேப்பரை வைத்து அழுத்தி விட்டு அடுத்த கோட் போட வேண்டும். அப்படி செய்யும் பொழுது லிப்ஸ்டிக் விரைவில் அழியாது. இன்னொன்று டிஷ்யூ பேப்பரால் அழுத்தியதும் சிறிதளவு பவுடரைத் தடவி விட்டு இன்னொரு கோட் லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.
மென்மையான பளபளப்பான உதடுகளை விரும்புவர்கள், லிப்ஸ்டிக் போட்டதும் லிப்கிளாஸ் தடவலாம். இதனாலும் சீக்கிரத்தில் லிப்ஸ்டிக் அழிவதை தடுக்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025