மனிதர்களோடு இணைந்து கெம்பீரமாக நடந்து செல்லும் சிங்கங்கள்….!!!
தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள க்ரூகெர் தேசிய வனவிலங்குப் பூங்காவை ஒட்டிய சாலையில் பரபரப்பாகவும், அவசரமாகவும் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையில் சிங்கங்கள் குறுக்கிட்டுள்ளனர். இதனை அந்த சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 4 சிங்கங்கள் கம்பீர பவனி வரும்நிலையில் அவற்றை வாகனங்கள் மிக மெதுவாக பின் தொடரும் காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.