தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கால் வெறிச்சோடிய சாலையில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்!

Default Image

தென்னாபிரிக்காவில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் பூங்காவில் மனித நடமாட்டமில்லாத வெறிச்சோடிய சாலைகளில் ஆங்காங்கே ஓய்வெடுக்க கூடிய சிங்கங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் தான் காணப்படுகிறது. எனவே அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதுடன், கூரூஜர் தேசிய பூங்காவும் கடந்த மாதம் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

தேசிய பூங்காவில் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில் பூங்காவிற்கு செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சாலைகளில் வாகனங்கள் மற்றும் மனித நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால், அந்த கூரூஜர் தேசிய பூங்காவில் உள்ள விலங்குகள் மிக சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனவாம். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் அந்தப் பூங்காவின் சாலையில் படுத்து ஓய்வு எடுத்து வந்ததை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்