இலங்கை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு..!
இலங்கை கொழும்புவில் இருக்கும் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சிங்கத்திற்கு சில இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இலங்கை கொழும்புவில் இருக்கும் தெஹிவாலா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷீனா என்ற 11 வயதுடைய பெண் சிங்கத்திற்கு சளி தொந்தரவு ஏற்பட்டதால் அதனை பரிசோதனை செய்து மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் சிங்கத்திற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் சிங்கத்தை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர். மேலும், இம்மாத தொடக்கத்தில் 12 வயதுடைய தோர் என்ற ஆண் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டு சிங்கங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தியா, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.