லிங்குசாமி படத்தில் இணைந்த துப்பாக்கி பட நடிகை.!

லிங்குசாமி இயக்கும் படத்தில் அக்ஷரா கவுடா இணைந்துள்ளார்.
தமிழில் ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியும் , தயாரித்தும் வந்த லிங்குசாமி கடைசியாக சண்டைக்கோழி-2 படத்தினை இயக்கியிருந்தார். அதன் பின் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.
இந்த நிலையில், இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொதினேனி நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாவும், ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் அக்ஷரா கவுடா இணைந்துள்ளார். இவர் தமிழில், அஜித்துடன் ஆரம்பம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜெயம் ரவி உடன் போகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025