3D முறையில் வரையப்படும் கோடுகள்..!
ஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் 3D முறையில் வரையப்படும் கோடுகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
குயின்ஸ்லாந்து மாகாணம் பவுலியா நகரில் (Boulia) வரையப்பட்டுள்ள இத்தகைய கோடுகள் வாகனங்களில் வருவோருக்கும், தூரத்தில் இருந்து பார்ப்போருக்கும் சாலையின் குறுக்கே பெரிய அளவிலான தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால் குழப்பமடையும் வாகன ஓட்டிகள் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து ஓட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக விபத்துக்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக குயின்ஸ்லாந்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.