ஜான்சி ராணி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய என் தலைவர்களை போல நானும் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்!

Default Image

ஜான்சி ராணி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய என் தலைவர்களை போல நானும் கஷ்டங்களை அனுபவிக்கிறேன் என கங்கனா கூறியுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அதுபோல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான விவகாரத்தில் மும்பை போலீசார் குறித்து நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். மேலும், மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனா காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்நிலையில, மும்பையில் உள்ள அவரது பங்களாவில் அனுமதி இன்றி கட்டுமான பணிகள் நடந்ததாக அண்மையில் அது இடிக்கப்பட உத்தரவிடப்பட்டது. அதனை அடுத்து ஒரு பகுதி இடிக்கப்பட்டதை அடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை கங்கனா அனுப்பியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கட்டடத்தை இடிக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

இருந்தாலும் 40 சதவீதம் அளவிற்கு பங்களா இடிக்கப்பட்டுள்ளதாக  2 கோடி வரை நஷ்ட ஈடு கோரி இவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மீண்டும் அண்மையில் மும்பை காவல்துறையின் கங்கானாவும் அவரது சகோதரியும் மதரீதியான பிரச்சனைகளை தூண்டுவதாக புகார் அளிக்கபட்டது.

இதனையடுத்து இந்த புகாரை விசாரிக்க மும்பை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கங்கனா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பதிவு ஒன்றில் கங்கனா கூறியிருப்பதாவது, தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாவர்க்கர் ஜான்சிராணி போன்றவர்களை பின்பற்றுபவள்.

அரசாங்கம் அவர்களை சிறையில் தள்ளியது போலவே தன்னையும் சிறையில் தள்ள முயற்சிப்பதாகவும், தன்னுடைய தலைவர்கள் பட்ட துன்பத்தை தான் அனுபவித்து வருவதாகவும் மேலும் அவர்கள் பட்ட துன்பத்தை அனுபவிக்கத் தான் காத்திருப்பதாகவும் இதனால் தன்னுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், லட்சுமிபாயின் கோட்டை உடைக்கப் பட்டது போல தன்னுடைய வீடும் உடைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சகிப்பின்மை கும்பலிடம் சென்று இந்த சகிப்புத்தன்மையற்ற நாட்டில் எவ்வளவு வலியைக் கடந்து வந்தார்கள் என்று யாராவது கேட்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்