நிகோபார் தீவில் லேசான நிலநடுக்கம்..!
நிகோபார் தீவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 1.49 மணியளவில் நிகோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் நிலநடுக்க பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நேற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கிருக்கும் கேம்பெல் பே பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.