இன்று மக்களுக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது புற்றுநோய் தான். இந்த புற்றுநோய் பற்றிய கதைகள் பற்றி பார்ப்போம்.
இன்று மக்களுக்கு மத்தியில் உயிர்கொல்லி நோயாக கருதப்படுவது புற்றுநோய் தான். இந்தப் புற்றுநோய் ஒருவரை பாதித்தது என்றால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதையும் சீர்குலைத்து விடுகிறது. புற்றுநோயை பொறுத்தவரையில், புற்றுநோய்களில் 40 சதவீதம் வரை தடுக்கக்கூடிய காரணங்களால் நாம் மாற்ற முடியும்.
ஆல்கஹால் கட்டுப்பாட்டு கொள்கையை வலுப்படுத்துதல், புகையிலை இல்லாத தலைமுறை உருவாக்குதல் போன்ற விளம்பரத்தின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இதிலிருந்து விடுபடலாம் என ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது. மேலும் 2040 க்குள் 5 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் புகையிலை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் படி ஐரோப்பாவில் உலகிலேயே அதிக அளவில் மது அருந்துகின்றனர். அதேநேரத்தில் புகையிலை மற்றும் புகையிலை பயன்பாடு ஆகியவை 15-20 சதவிகித புற்றுநோய்கள் காரணமாகிறது என கூறப்படுகிறது.
தற்போது இந்த பதிவில் புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர், அவரது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவரை தொட்டால் அந்த நோய் பரவும் என்பதால் அவருக்கு ஓய்வறை, உணவு மற்றும் பாத்திரங்கள் போன்றவை தனித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு ஒருவர் தொடுவதன் மூலமாகவும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் பரவும் என்பது கட்டுக்கதை. சில புற்றுநோய் வைரஸ்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. மனித பாப்பிலோமா வைரஸ் என்பது பாலியல் ரீதியாக பரவக்கூடிய வைரஸ். இது கர்ப்பப்பை வாய் தொற்று நோய்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மற்றும் ஹெபடைடிஸ் சி வைரஸ் பரவக்கூடிய மற்றும் கல்லீரல் புற்று நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
புற்றுநோய்களில் பெரும்பகுதி பிறழ்வு காரணமாக ஏற்படும் வயது காரணமாக ஏற்படுகிறது. இது மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது எனவே வயதானவர்களுக்கு பெரும்பாலும் இந்த புற்றுநோய் வருகிறது.
புற்று நோய் அதன் ஆரம்ப கட்டங்களில் வலியற்றது மற்றும் அழுகுறியற்றது. இது பொதுவாக மேம்பட்ட கட்டங்களில் வலியுடன் தொடர்புடையது. எனவே ஆரம்பகால கண்டறிதல் மூலம் நோயை குணப்படுத்தலாம். இந்தியாவில் பொதுவான புற்றுநோய்களில் சில வாய்வழி புற்றுநோய்கள் மற்றும் மார்பகப் புற்று நோய்கள் காணப்படுகிறது. வாய்வழி புற்றுநோய் என்பது கண்ணத்தில் வழியற்ற புண் இருப்பதால் முதலில் லேசான ரத்தப்போக்கு ஏற்படுகிறது. புகையிலை மெல்லும் போதும் மற்றும் புகை பிடிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரம்பத்தில் நோயறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம். சமீபத்திய முறைகள் மற்றும் ஆராய்ச்சிகளின்படி லட்சக்கணக்கான நோயாளிகள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளோம். கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சையை பயன்படுத்தி ஒரு நோயாளியின் ஆயுட்காலம் நீடிக்கலாம் என்றும், ஒரு புற்று நோய்க்கு அஞ்சத்தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.
பொதுவாக நம்மில் பலரும் உடலில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதை சாதாரணமாக விட்டுவிடுகிறோம். இவையே வாழ்நாளில் நமது உயிரைப் பறிக்கக் கூடிய ஒரு நோயாக மாறிவிடுகிறது. உடலில் ஏதேனும் அறிகுறி குறித்து சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவர் மற்றும் புற்று நோய் நிபுணரை சந்திக்க வேண்டும். முன்கூட்டியே பிரச்சினைகள் கண்டறியப்படும் சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும். மேலும் வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவை உண்ணுதல், மதுவை தவிர்த்தல், புகையிலை பிடித்தல், உடல் பருமன் மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல் ஆகியவை புற்று நோய் ஏற்படுவதை குறைக்கிறது.
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…
உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…