தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குட்டி ஸ்டோரி பாடலை வயலின் மூலம் வாசித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் மற்றும் போஸ்ட்ர்களை டிரெண்ட் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
அந்த வகையில் தளபதி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறிய #HBDTHALAPATHYVijay என்ற ஹேஷ்டேக் 9.1மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.பல பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மாஸ்டர் படத்தில் விஜய் அவர்கள் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடலை வயலின் மூலம் வாசித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…