அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தன்னிடம் பணம் இன்றி தவித்து வந்துள்ளான். உடனே அவன் தனக்கு ஒரு 50 டாலர் பணம் தேவைப்படுகிறது என அதனை தந்து உதவ வேண்டும் என கடவுளுக்கு கடிதம் எழுதியுள்ளான்.
ஆனால், கடவுள் முகவரி தெரியாததால், பெறுநர் படிவத்தில், கடவுள், அமெரிக்கா என எழுதி அனுப்பிவிட்டான். இதனை பார்த்த தபால்துறையினர், இந்த கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவிட்டனர்.
இந்த கடிதத்தை பார்த்த அமெரிக்க அதிபர். இந்த சிறுவனின் அறியாமையை கண்டு, பணம் அனுப்ப எண்ணினார். ஆனால் இவன் சிறுவன் ஆதலால் 50 டாலர் அனுப்ப வேண்டாம். ஒரு 20 டாலர் மட்டும் அச்சிறுவனுக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளை மாளிகை முகவரியில் இருந்து இந்த 20 டாலர் அச்சிறுவனுக்கு சென்றடைந்தது.
அதனை கண்ட அச்சிறுவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து கடவுளுக்கு நன்றி எழுதினான். அதனை கண்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த கடிதத்தில், ‘ கடவுளே எனக்கு நீங்கள் பணம் அனுப்பியுள்ளீர்கள் மிகவும் நன்றி. ஆனால், அடுத்த முறை பணம் அனுப்பும் போது, வெள்ளை மாளிகை மூலம் அனுப்ப வேண்டாம். ஏனென்றால், நீங்கள் அனுப்பிய 50 டாலரில் இருந்து, 30 டாலரை எடுத்துக்கொண்டு 20 டாலரை மட்டுமே எனக்கு அனுப்பிவைத்தனர். ஆதலால் இனி எனது முகவரிக்கே அனுப்பிவிடுங்கள் என அந்த கடிதத்தில் எழுதி உள்ளான் அந்த சிறுவன்.
மேற்கண்ட இக்கதை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்பது பற்றி தெரியாவில்ல்லை. ஆனால் நடப்பு உலகம் அப்படிதான் இருக்கிறது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…