பணம் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதிய சிறுவன்! 20 டாலர் அனுப்பிய கடவுள்!

Default Image

அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தன்னிடம் பணம் இன்றி தவித்து வந்துள்ளான். உடனே அவன் தனக்கு ஒரு 50 டாலர் பணம் தேவைப்படுகிறது என அதனை தந்து உதவ வேண்டும் என கடவுளுக்கு கடிதம் எழுதியுள்ளான்.
ஆனால், கடவுள் முகவரி தெரியாததால், பெறுநர் படிவத்தில், கடவுள், அமெரிக்கா என எழுதி அனுப்பிவிட்டான். இதனை பார்த்த தபால்துறையினர், இந்த கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவிட்டனர்.
இந்த கடிதத்தை பார்த்த அமெரிக்க அதிபர். இந்த சிறுவனின் அறியாமையை கண்டு, பணம் அனுப்ப எண்ணினார். ஆனால் இவன் சிறுவன் ஆதலால் 50 டாலர் அனுப்ப வேண்டாம். ஒரு 20 டாலர் மட்டும் அச்சிறுவனுக்கு அனுப்பி வைத்தனர்.  வெள்ளை மாளிகை முகவரியில் இருந்து இந்த 20 டாலர் அச்சிறுவனுக்கு சென்றடைந்தது.
அதனை கண்ட அச்சிறுவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து கடவுளுக்கு நன்றி எழுதினான். அதனை கண்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த கடிதத்தில், ‘ கடவுளே எனக்கு நீங்கள் பணம் அனுப்பியுள்ளீர்கள் மிகவும் நன்றி. ஆனால், அடுத்த முறை பணம் அனுப்பும் போது, வெள்ளை மாளிகை மூலம் அனுப்ப வேண்டாம். ஏனென்றால், நீங்கள் அனுப்பிய 50 டாலரில் இருந்து, 30 டாலரை எடுத்துக்கொண்டு 20 டாலரை மட்டுமே எனக்கு அனுப்பிவைத்தனர். ஆதலால் இனி எனது முகவரிக்கே அனுப்பிவிடுங்கள் என அந்த கடிதத்தில் எழுதி உள்ளான் அந்த சிறுவன்.
மேற்கண்ட இக்கதை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  இது உண்மையா என்பது பற்றி தெரியாவில்ல்லை. ஆனால் நடப்பு உலகம் அப்படிதான் இருக்கிறது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்