கொரோனாவை வெல்வோம் மக்களை காப்போம்..! நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு..!
கொரோனாவை வெல்வோம் மக்களை காப்போம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் விழுப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். மேலும் பல சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவின் மருத்துவ உதவிக்கு கொடுத்து வருகிறார்கள்.
மேலும் சிலர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியது “கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி அச்சுறுத்தலாக மட்டுமில்லாமல், நிறைய உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசும், சுகாதார துறையும் நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நமக்கும் நிறைய விதிமுறைகளை சொல்லி இருக்கிறார்கள். அதில் சிலவற்றை பகிர்வதற்கு தான் இந்த வீடியோ. இதில் மிக முக்கியமானது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது. நான் எனது முதல் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். வீட்டை விட்டு அவசியம் என்றால் மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வெளியே வரும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நமது கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதை விட மிக முக்கியமானது வெளியில் போகும்போது முக கவசம் அணிய வேண்டும்.
இதையெல்லாம் கடைப்பிடிப்பது நம்மளுடைய கடமை. அதுமட்டுமில்லாமல் கொரோனா பற்றி எந்த பயமும் இல்லாமல் தனது உயிரையும், குடும்பத்தையும் மறந்து நாம் எல்லோருக்காகவும் இந்த கொரோனாவை எதிர்த்து போரிட்டு வரும் முன்கள பணியாளர்கள் அவுங்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் அதுவாகத்தான் இருக்கும்.
நாம் எல்லோரும் நினைத்தால் நிச்சயம் இதில் இருந்து மீண்டுவர முடியும். ஒன்றிணைவோம். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் காப்போம். நாட்டையும் காப்போம். கொரோனாவை வெல்வோம் மக்களை காப்போம் என்று தெரிவித்துள்ளார்.
#StayHomeStaySafe#DefeatCorona pic.twitter.com/Geqj8Xet6g
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 21, 2021