வயிற்று புண் குணமடைய இயற்கை வழிமுறைகள் சில காண்போம்
வயிற்று புண் தற்போதைய காலகட்டத்தில் அதிகளவில் பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகவும். இதனை போக்குவதற்கான இயற்கை தீர்வுகள் சிலவற்றை பார்ப்போம்.
வயிற்று புண் குணமடைய
முதலில் வயிற்றுப்புண்ணுக்கு இயற்கையாக கொடுக்கப்பட்டுள்ள மருந்து வாழைப்பூ தான். இதை தொடர்ச்சியாக சாப்பிடுவது நல்லது. வெண்டைக்காயை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வதும் தீர்வுக்கு வழிவகுக்கும்.
முட்டை கோஸில் ரசம் வைத்து உண்பது மிகவும் நல்லது, சுண்டைக்காய் கூட்டு, காளான், பச்சை பட்டாணி ஆகியவை வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது. கேரட் இலைகளை பிழிந்து சாறு எடுத்து குடிப்பது மிக சிறந்த தீர்வாகும்.
இரவில் வடித்த சாதத்தில் காலையில் உப்பு சேர்த்து குடிப்பதும் இயற்கையான நல்ல முறை. புன்னகை மரத்தின் இலை, பலா இலை ஆகியவை மிகவும் நல்லது.