இளநீரில் இவ்வளவு பயன்கள் உள்ளதா வாருங்கள் பார்ப்போம்
பொதுவாக வெயில் நேரங்களில் உடல் சூட்டை தணிக்கவும் நல்ல நீர் பானமாகவும் பயன்படுவது இளநீர் தான். இது உடலுக்கு குளிர்ச்சி தன்மை அளிப்பதோடு வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது. முந்தைய காலங்களில் வீடுகளில் இருந்து உடனுக்குடன் பறித்து சாப்பிடும் அளவிற்கு இருந்த இந்த இளநீர் இருந்தது. தற்போது கடைகளில் மட்டுமே பார்க்கக்கூடிய அளவிற்கு மரங்கள் நடும் பழக்கம் குறைந்து விட்டது.
இளநீரின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்:
இது உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது மற்றும் உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்ற நன்கு துணைபுரிகிறது. இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம் போன்றவை மின்பகுளிகளாகச் செயல்பட்டு உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவினை சரியான அளவில் சமநிலைப்படுத்துகின்றன. மேலும் இந்த இளநீரில் அதிகளவில் பொட்டாசியம் உள்ளதால் இவை சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. நல்ல செரிமானத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைத்து சீரான அளவில் வைக்கிறதுல்.
இதே மாதிரி போவதற்கு மட்டுமல்லாமல் அழகுக்கும் பயன்படுகிறது. அதாவதுஉடலின் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினால் உண்டாகும். சருமச்சுருக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் வெயில் நேரங்களில் இந்த இளநீரைை முகத்தில் தடவுவதால் பளபளப்பாக அழகாக முகம் காட்சியளிக்கும். இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த இளநீரை நாமும் வாங்கி பயன்பெறுவோம்.