வீட்டில் ராம நவமியை எப்படி கொண்டலாம் என பார்க்கலாம்.!
கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும்.
ராம நவமிக்கு 10 நாட்கள் முன் விரதம் இருந்து ராமரின் அவதாரத்தைக் கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.அந்த வகையில் இந்தாண்டு ஏப்ரல் 2-ம் தேதி(நாளை ) ராம நவமி வருகிறது.
இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்ள கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு ராம நவமி பெரிய அளவில் கொண்டாடப்பட வாய்ப்பில்லை இதனால் வீட்டில் ராம நவமியை கொண்டாட உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் ராம நவமியை எப்படி கொண்டலாம் என பார்க்கலாம்.
1. ஸ்ரீ ராமின் சிலையை அலங்காரப்படுத்தி அதன் முன் வழிபாடு செய்யலாம். ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீ ராம் என எளிமையான ராம ஸ்தோத்திரத்தை சொன்னாலே போதும் நமக்கு நல்லருள் கிடைக்கும்.
ராமாயண கதைகளையும், ராமனின் சிறப்புகளை ராம நவாமியில் படிப்பது மிக நல்லது.மேலும் ராமர் சிறிய அளவிலான சிலையை தொட்டிலில் ஊசலாட்டாலாம்.