இரத்த கொதிப்பு குறைய இயற்கையான வழிமுறைகள் சில பார்ப்போம்!
தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சந்திக்க கூடிய ஒரு முக்கியமான உடல் வியாதி என்றால் இரத்த அழுத்தம் தான். இரத்த அழுத்தம் அல்லது கொதிப்பு குறைவதற்கான சில இயற்கை வழிமுறைகளை நாம் இன்று பார்ப்போம்.
இரத்த கொதிப்பு குறைய
பச்சை அருகம்புல்லுடன் மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து அதில் ஒரு முட்டை அளவு எடுத்து சாப்பிட்டு பால் குடித்து வர இரத்த அழுத்தம் குறையும். தாமரை பூவை சுத்தம் செய்து அவித்து அந்த நீரில் தேன் கலந்து குடித்து வர சரியாகும்.
பசும்பாலில் 2 பள்ளு பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வர இரத்த கொதிப்பு குறையும். அடிக்கடி அவரைக் காயையும் உணவில் சேர்த்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.