வலிமை படத்தின் பின்னணி இசை பணி தொடங்கியுள்ளது என்று இசையமைப்பாளர்யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் ரேஸ் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது .
மேலும் இந்த வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட வெளி வராததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் .மேலும் பலர் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது வலிமை படத்திற்கான பின்னணி இசை தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டு அவரது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பால் தற்போது ரசிகர்கள் சற்று உற்சாகத்தில் உள்ளார்கள்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…