“நான் எங்கு இருக்கேன்”கண்டுபிடிங்க பார்க்கலாம் .! ஒளிந்து கொண்ட குட்டியானை.!
கரும்பை தின்று விட்டு மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்த குட்டி யானையின் கியூட்டான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
குழந்தைகளை போன்று விலங்குகளின் குட்டிகளும் பல சேட்டைகளை செய்வது உண்டு .அந்த வகையில் ஒரு யானையின் கள்ளம் கபடமில்லாத செயல் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது . சுமார் 2000-க்கும் மேற்பட்ட யானைகளை உடைய தாய்லாந்து நாட்டில் உள்ள விவசாயிகள் தூங்காமல் தங்கள் வயல்களை காவல் காப்பார்கள் .
ஏனெனில் அங்குள்ள யானைகள் ஊர்களில் உள்ள கரும்பு காட்டினுள் நுழைந்து சோளம் ,கரும்பு உள்ளிட்டவற்றை தின்றுவிட்டு செல்லும் .அதே போன்று வடக்கு தாய்லாந்தின் சியாங் மாங் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் குட்டி யானை ஒன்று கரும்பை தின்ன வந்துள்ளது . தோட்டத்தில் சத்தத்தை கேட்டு ஓடி வந்த காவலர்கள் டார்ச் லைட்டை அடித்ததும் குட்டியானை ஓடி சென்று அங்கிருந்த மின் கம்பத்தின் பின்னால் ஒளிந்து அசையாமல் நின்றுள்ளது.
மின்கம்பத்தை விட பெரிய உடம்பை உடைய யானைக்குட்டி மின்கம்பத்தின் பின்னால் ஒளிய முயற்ச்சித்தை காவலர்கள் போட்டோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட ,அந்த யானை குட்டியின் கள்ள கபடமில்லாத கியூட்டான செயலை பார்ப்பவர்கள் ரசித்து வருவதோடு யானைக்குட்டியின் கியூட்டான புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.