நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மாம்பழத்தின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்…!

Default Image

கோடைகாலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் தான். கோடைகாலத்தில் மாம்பழம் அதிகளவில் கிடைக்கிறது. அட்டகாசமான இனிப்பு சுவை கொண்ட மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியமும் இதில் அதிக அளவில் தான் இருக்கிறது. இப்போது நாம் மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மாம்பழத்தின் மருத்துவ நன்மைகள்

மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நமது தோல் பளபளப்புடன் மாறுவதுடன் தோல் அரிப்பு மற்றும் தோல் நோய் போன்றவையும் நீங்குகிறது. மேலும் தீராத தலைவலியை குணப்படுத்த கூடிய தன்மை இந்த மாம்பழத்திற்கு உண்டு. இதில் அதிக அளவு நார்ச் சத்து காணப்படுவதால் ஜீரண உறுப்புகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த மாம்பழத்தை சாப்பிடுவதால் பல் வலி மற்றும் பல் ஈறுகளில் காணப்படக் கூடிய இரத்தக் கசிவு ஆகிய பிரச்சினைகள் குணமாகும்.

மேலும் கண்களில் ஏற்படக்கூடிய கண் எரிச்சல், கண் அரிப்பு மற்றும் மாலைக்கண் நோயை குணப்படுத்த மாம்பழம் உதவுகிறது. மேலும் இந்த மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுவதால், நமது உடலில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்க இது உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் உருவாகக்கூடிய கற்களைப் போக்குவதிலும், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு இது உதவுகிறது.

மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் சத்து காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிச்சயம் மாம்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஹார்மோன்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் இது உதவுகிறது. இத்தனை நன்மைகள் கொண்ட மாம்பழத்தை மலிவாக கிடைக்கும் நேரங்களிலாவது அதிகளவில் வாங்கி உட்கொள்வோம், தேவையற்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்