தூய்மையான, துர்நாற்றமற்ற கிச்சனுக்கான சில டிப்ஸ் அறியலாம் வாருங்கள்…!
வீட்டிலிருக்க கூடிய பெண்கள் தங்களை விட தங்களை சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். குறிப்பாக அதிகம் பெண்கள் பயன்படுத்த கூடிய கிச்சன் பகுதியை அழகாகவும் துர்நாற்றமில்லாமலும் வைத்திருக்க ஆசைப்படுவார்கள். அதற்கான சில குறிப்புகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சிங்க் துர்நாற்றம் நீங்க
சிங்க் பகுதியில் அதிகம் நீர் புழக்கம் இருப்பதால், அங்கு துர்நாற்றம் காணப்படுவதுடன் அப்பகுதியில் பாசி பிடித்தும் காணப்படும். இந்த துர்நாற்றங்கள் நீங்குவதற்கு நாம் பூச்சி உருண்டை எனப்படும் நாப்தலின் உருண்டையை போட்டு வைத்தால் துர்நாற்றம் எடுக்காது. மேலும், அங்கு கரப்பான் பூச்சி வருவதும் தவிர்க்கப்படும்.
பாத்திரம் கழுவும் பஞ்சு
பாத்திரங்களை கழுவ உபயோகப்படுத்த கூடிய வலைகள் அல்லது பஞ்சுகளில் அடிக்கடி நீர் மற்றும் சோப்புகளை தொட்டு தொட்டு பயன்படுத்துவதால் பாத்திரம் கழுவி முடித்த பின் நீண்ட நேரம் நீரில் இருக்கும் அந்த பஞ்சில் பாக்டீரியாக்கள் உருவாகும். எனவே இந்த பஞ்சுகளை வாரம் ஒரு முறை மாற்றி விடுவது நல்லது. இதனால், பாக்டீரியாக்கள் உருவாவதை தவிர்க்கலாம். மேலும், இதன் மூலமாக வரக்கூடிய தேவையற்ற நோய்களையும் தவிர்க்கலாம்.
சமையல் கட்டின் எண்ணெய் பிசுக்கு நீங்க
சமையலுக்கு பயன்படுத்த கூடிய அடுப்புகள் மற்றும் பாத்திரங்கள் வைத்திருக்கக் கூடிய பகுதி லேசான எண்ணெய் பசையுடன் காணப்படும் இந்த எண்ணெய்ப் பிசுக்கை போக்குவதற்கு நீர் மட்டும் போதாது. இதற்கு லேசாக கடலை மாவை சேர்த்து 2 நிமிடம் ஊற வைத்து விட்டு துடைத்து எடுத்தால் சமையல் கட்டு பளிச்சென்று இருக்கும்.
பூச்சி தொல்லை நீங்க
கிச்சன் பகுதியில் உடைத்த தேங்காய், வெட்டிய எலுமிச்சம் பழம் என எதை வைத்தாலும் சிறிய சிறிய பூச்சிகள் வந்து அதன் மீது அமர்ந்து விடும். இது நமது உடலில் பல நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமையும். இந்த பூச்சிகளை தவிர்ப்பதற்கு ஒரு பாட்டிலில் தேன் அல்லது வாழைப்பழம் போட்டு லேசாக நீர் ஊற்றி ஒரு கவர் வைத்து கட்டி விட்டு, சிறிய ஓட்டை போட்டு வைத்தால் இது போன்ற பூச்சிகள் வராமல் தவிர்க்கலாம்.
குப்பை நாற்றம் நீங்க
சமையல் கட்டில் இருக்கும் குப்பைகளிலிருந்து மோசமான துர்நாற்றம் உருவாகும். இந்த துர்நாற்றம் நீங்குவதற்கு குப்பை தொட்டி உள்ள பகுதிக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா போட்டு வைத்தால் போதும். துர்நாற்றம் வராது. இந்த பேக்கிங் சோடாவை மூன்று மதத்திற்கு பின் மாற்றி விட வேண்டும்.