விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் குறித்து சில தகவல்கள் அறியலாம் வாருங்கள்…!
வருடந்தோறும் ஆவணி மாதம் விநாயகரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இது விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் குடும்ப விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பொழுது விநாயகரை சிலை செய்து தங்கள் பகுதியில் வைத்து வணங்கி, வழிபட்டு அதன் பின்பதாக கடலில் அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதே போல தமிழகத்திலும் இந்த விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மூன்றாவது அல்லது ஐந்தாவது நாள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கின்றனர். இந்த விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்கின்றனர். மேலும் ஐம்பத்தி ஒரு வடிவத்தில் இந்த விநாயகரின் சிலைகள் வைத்து வழிபடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி, அதாவது இன்று நாடு முழுதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.