2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிடலாம்…! தோல்விக்கு பின் பொது மேடையில் பேசிய ட்ரம்ப்…!

புதிய அரசியல் கட்சியை தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்கள் போலியானது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ட்ரம்ப் படுதோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பின், முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின், ஓர்லாண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், புதிய அரசியல் கட்சியை தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்கள் போலியானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பைடன் அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டதாகவும், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும், 2024 ஜனநாயக கட்சியினரை மூன்றாவது முறையாக தோற்கடிப்பதற்கான வாய்ப்பு அடுத்த தேர்தலில் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – பிரதமர் மோடி கவலை.!
March 28, 2025